50 thoughts on “KAATRIN MOZHI LYRIC WRITING CONTEST | RADHAMOHAN | JYOTIKA | VIDAARTH | A.H. KAASHIF | MADHAN KARKY

 1. தமிழ் கவிதைகள், பாடல் மற்றும் கதைகள் - ப்ரணா says:

  தமிழ்த்திரைப்பாக்கூடம் நடத்திய புதுப்பாடலாசிரியர் போட்டியில் வென்றுள்ளேன்.
  வெற்றி பெற்ற பாடலை கேட்க
  https://www.youtube.com/watch?v=WdIl8lenCmg – நன்றி – ப்ரணா

 2. பாடல் – இம்ரான் 9943966476 

  பல்லவி:

  ஊன்.. உயிரே…

  எதுக்கிந்த முடிவுகள் சொல்வாயோ… 

  ஊர்க்குருவி நீ

  குடில்விட்டு பறந்திட துணிந்தாயோ… 

  மென் மழையே

  புயலென வேகம் கொண்டாயோ… 

  என்மனதில்

  எழுகிற வெறுமை உணர்வாயோ…. 

  தரை இறங்கிட்ட

  விண்மீன் நீயேதான்.. 

  தவிக்குது நெஞ்சம் உன்னால்தான். 

  நீ கடந்த

  நம் சாலை

  திரும்பிட ஏங்குது அருகில் வா. 

  தோயாதே வழிபயம் கண்டு. ..

  துடித்திடும் உணர்வுகள் நீ கொண்டு.

  நீ சொன்னால் சரியாகும்..

  தடுத்திட நினைத்தால் அது பாவம்.

  உனைக்கேட்கும்

  பார்வை போதும்,

  உனைப்பேசும்

  மொழி போதும்,

  உனை நினைத்திடும்

  உணர்வுகள் உன்னதமாகி

  மனிதம் சூடி ஆளும்….

  (ஊன்… உயிரே…)

 3. இப்போட்டிக்காக நான் எழுதிய பாடல், HD Lyric Video வடிவில்…
  https://www.youtube.com/watch?v=0ZpAFbJmB7E

 4. இப்பொழுது இந்த நிமிடம் தான் அறிந்தேன்…மன்னிக்கவும்…இப்பொழுது எழுதலாமா???

 5. Nan intha music Ku song yezhuthi irukan kekanumna. Mr.dhee YouTube page LA irukum kelunga semaiya irukum line lam

 6. தமிழ் கவிதைகள், பாடல் மற்றும் கதைகள் - ப்ரணா says:

  காற்றின் மொழி பாடல் போட்டியில் முதல் தேர்வாளர் பட்டியலில் அடியேனும் இடம் பெற்றுள்ளேன்.
  மொத்தம் 700 பாடல்களிலிருந்து 66 பேர் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளோம். சக "பாட்"டாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
  #காற்றின்மொழி
  எண் 6: பிரனானன் என்பது நான் தான். – ப்ரணா
  https://www.amazon.in/dp/B07FR6X89M

 7. வெற்றிப்பெற்ற தோழர்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

  (குறிப்பு)
  நண்பர்கள் எல்லோரும் கூறினர் உனது வரிகள் கொண்டாடப்பட வேண்டிய வரிகள் ஆனால் உனக்கு நிச்சயமாக வாய்ப்புக் கிடைக்காது என்று, அது நிரூபிக்கப்பட்டது. பரவாயில்லை நிச்சயமாக எனது பாடல்கள் திரையில் விரைவில் உலாவரும்…..

  வாழ்க இந்தியாவும் அதன் நேர்மையும்.

  இந்த மெட்டுக்கும் சூழலுக்கும் ஏற்றபடி நான் எழுதிய வரிகள்.
  இசைக்க, ருசிக்க, கவித்துவம் தெரிந்த அனைவருக்காகவும்…

  தேன்நதியே….

  தேய்ப்பிறைப் போலே
  தேய்ந்தது போதும் உயிரே
  தேன்நதியாக மாறிட மாறிட
  தோள்கொடுப்பேன்
  தாய் மடிப்போலே
  இருந்தது போதும் நிழலே
  காவியமாக வளர்ந்திட வளர்ந்திட
  துணையிருப்பேன்

  நீ இல்லாமல் நானேது
  உணர்ந்தேன் ஒவ்வொரு நாழிகையும்
  உருகாத தினமேது
  மெழுகென நீயும் கரைந்தது போதும்
  துயிலாத விழிரெண்டும் சிகரம் தொடத்தொட தவிக்குதே
  தீராத மோகங்கள்
  தீப்போலே என்னுள் இருந்தும்
  நீ சிகரம் தாண்டிய நாழிகையில்
  என் சிதைந்த ஆசையும் வாழ்த்துமடி
  நீ பறந்திடப் பறந்திட கனவுகள் நிஜம் தொட
  காற்றின் மொழியும் புரிந்திடும் புரிந்திடும்

  தேன்நதியே நீ பாய்ந்திட பாய்ந்திட யாவும் இனித்திடும்
  தீத்துளியாய் நீ பரவிட பரவிட
  வானம் வசப்படும்
  தூண்மகளே எனைத் தாங்கிய தருணங்கள் ஒரு துளி மறவேன்
  வான் முகிலாய் நீ பறந்திட பறந்திட வழிகொடுப்பேனடி

  (புல்லாங்குழல் இசை வரும் இடமெல்லாம் இந்த வரிகளை நிரப்பிப் பாருங்கள் அவ்வளவு அழகாக இருக்கும்)

 8. முடிவுகள் வந்துவிட்டது. மிகுந்த ஏமாற்றம்.. இருப்பினும் தேர்வு செய்யப்பட்ட 66 பேருக்கும் வாழ்த்துக்கள்..

 9. Thanks for the opportunity and best wishes to the shortlisted participants…👍🎼😍

  My entry didn't get through but just wanted to post it here purely out of interest and no disregard to the winners.👍

  (0:01)
  ஆளுமையே (ஆள் உமையே!)
  BGM
  (0:50)
  கண் இமைக்குள்ளே.. கனவுகள் சேர்த்தது போதுமடி
  விண் திறந்திருக்கு.. சிறகுகள் கொஞ்சம் விரிப்பாய் சகி
  (1:04)
  புரையான தயக்கங்கள்.. புன்னகையாலே தகர்ப்பாயே..
  பேரலை போலே…
  (1:13)
  படி தாண்டு் ஒரு பயம் இல்லை
  நீ நடை போடு ஒரு தடையில்லை
  (1:20)
  வாசுகியே நீ குறள் தீட்டு
  வள்ளுவனாய் நான் பொருள் எழுத
  (1:27)
  தலை கோதும் இரவுகள் இனிமேல்
  தோள் சாயும் பொழுதுகள் இனிமேல்
  விடுமுறை நாட்களில் போதும் பெண்ணே
  (1:38)
  கூரைக்கு மேலே தான்
  குளிர்வானக் குடையும் இருக்கு…
  BGM
  (1:53)
  இரவல் ஒளி இனி நிலவுக்கு வேண்டாம்…
  கண் இமைக்குள்ளே.. நீ கனவுகள் சேர்த்தது போதுமடி
  விண் திறந்திருக்கு.. நீ சிறகுகள் கொஞ்சம் விரிப்பாய் சகி (2)

 10. தமிழ் கவிதைகள், பாடல் மற்றும் கதைகள் - ப்ரணா says:

  Dhananjayan BOFTA @Dhananjayang
  #KaatrinMozhi Lyric writing contest update: Over 700 entries & @madhankarky sir has gone through them& first short list of 50 potential lyricists will b announced on Monday 5 pm. Do watch out for the list. For these 50 something special planned before finalizing the two winners👍
  twitter-ல்
  https://www.amazon.in/dp/B07FR6X89M
  www.facebook.com/pranapoems

 11. முடிவுகள் என்று அறிவிக்கப்படும்?? ஏதேனும் தகவல் உள்ளதா??

 12. முடிவுகள் என்று அறிவிக்கப்படடும் ?? ஏதேனும் தகவல் உள்ளதா??

 13. அன்புள்ள தனஞ்சயன் ஐயா அவர்களுக்கும், சகோதரர் கார்க்கி அவர்களுக்கும்,
  அன்பு தமிழ் வணக்கம்! காற்றின் மொழி பாடலும்… படமும்… வெற்றியடைய வாழ்த்துக்கள்!.

  இதோ காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியில் –
  என் இதயத்தை வருடிய அந்த இனிய புல்லாங்குழலின்
  மொழியை வரிகளாக மொழிபெயர்த்துள்ளேன்….

  ——————————————————–
  காற்றின் மொழி…
  காற்றின் மொழி, உன்/உந்தன் குரல் கேட்டால் புரியுமடி…
  காற்றின் மொழி, இனி இரவில் கேட்கும் உலகமடி…

  00:49
  நீயும் நானும், நினைத்தபடி நம் வாழ்க்கை-யில்லை
  இருந்து-மென்ன, எனக்காக என்றும் நீ இருந்தாய்…
  இன்பம் துன்பம், எப்போதும் உன் தோள் கொடுத்தாய்
  குடும்பம் மட்டும் வாழ்கையென்றே நீ வாழ்ந்தாய்…

  01:15
  என் கண்மணியே, குயிலின் உலகம் கூட்டில் மட்டும் இல்லையடி!
  வானம் திறந்தே காத்திருக்கு, சிறகை விரித்து பறந்து பாரடி!
  கண்மணியே குயிலின் உலகம் கூட்டில் மட்டும் இல்லையடி!

  01:36
  ஒவ்வொரு-முறை வீழந்த-போதும் எழுந்தவள் நீ மறவாதே…
  முற்றுப் புள்ளியின் முதுகில் ஏறி முன்னுரை எழுத தயங்காதே…
  யார் தடுத்த போதும் மறுத்த போதும் கனவுகள் மட்டும் கலையாதே…!

  01:56
  காற்றின் மொழி, உன்/உந்தன் குரல் கேட்டால் புரியுமடி…
  காற்றின் மொழி, இனி இரவில் கேட்கும் உலகமடி…
  ——————————————————–
  இப்படிக்கு முகவரி தேடி முகம் தொலைத்தவன்,
  த.செந்தில்நாதன்.

 14. முடிவை நோக்கி ஆவலோடு காத்திருக்கின்றேன்… யார் அந்த இருவர் !!!
  பா.இனியவன்

 15. Participated i the contest through mail…. Whether Iam selected or not that is not a matter through this forum I get the privilege to wish the team for providing a Idhayam varudum melodious music…Hats off team…. WONDERFUL WORK PEOPLE WILL SURELY MURMER THIS SONG for its tune

 16. Poonkatrey …….

  Poonkaatrey   Andha kanavilum unani nugarindhida nigalvadhu …naaan vaalgindra vaaalkayil mozhi vaalai maaruthey..

  Kan kanatha  kaatrilae mozhlin uyir kandein 

  Unnathey unn  vaalkai 

  Veer yaarum illai pangu alika…

  Manamae nun kangalilae valigal irundum sirippayae 

  Kaatrin mozhliai ketkamal yaarum urangalayae 

  Unnai paadamal unnai ketkamal naatkalum nigala vaaypu illayae 

  Unnai pirinthey naan vaalathaan manamum yerka marukirathey..

  Unn osayil anbai naan unarnthein purinthein  arintheinae…

  Unn solil…urimay terigirathey….naan unarnthein anbae..

  Kan kaanatha poovukul

  Andha Teenai poolavae 

  Unnadhu valigalum inikum neeram ingae unn pakkam paarthida kaathiru….

  Poonkaatry …..andha kanavilum unnai nugarindhida nigalvadhu naan vaalgindra vaalkayil mozhli vaalai maaruthey … (2)

  Sir I have even sung it please I want you to hear it once atleast please

 17. வாய்ப்புக்கு நன்றி சகோ. பாடல் அனுப்பி வைத்துள்ளேன். முடிவு எப்போது வரும்?

 18. நான் நேற்றிரவு பாடலை தங்களுக்கு அனுப்பியிருந்தேன்.. பதிவுகள் எப்பொழுது முடிந்தது என தெரிந்து கொள்ளலாமா..

 19. பல்லவி

  அழகான குடும்பம்
  அன்பான துணைவண்
  அறிவான குழந்தை

  அல்லாடுதே மனம் தல்லாடுதே
  கனவெல்லாம் தடுமாறுதே

  சரணம்-1
  என் தோட்டப் பறவைகளே!
  என்னோடு வாறிகலா!
  என் கண்ணாளன் ஊர்கோலத்தில்
  என் வீட்டு சோலைகளே!
  மலர் மாலையாய் வாறிகலா!
  என் கண்ணா கண்ணனின்
  அங்கமெல்லாம் தங்கமாக்க

  அழகான குடும்பம்
  அன்பான துணைவண்
  அறிவான குழந்தை

  அல்லாடுதே மனம் தல்லாடுதே
  கனவெல்லாம் தடுமாறுதே

  பல்லவி

  சரணம்-2
  ஆச வச்ச இந்த நதி
  இந்த வசந்த மாளிகையில்
  ஓசை இல்லா கடந்து போவதெப்படி!
  துணைவண் எல்லாம் தூங்கும் போது!
  இந்த மெளனம் எல்லாம் சிரிப்பதெப்படி!
  அல்லும் பகலும் மின் மினியாய் பூக்கும்போது!
  என் ஆசை கனவெல்லாம்
  சுமைதாங்கியாகுமே!
  பல்லவி
  writing by- K.M.Pari
  Cell No-9894797110

 20. I even went to BOFTA now in Kodambakkam but it was closed. I am ready to come and give it tomorrow. Please consider my request.

 21. Hi Sir ! I've mailed my entry for this contest, about an hour ago. Since I didn't know about the time restrictions and kept only the last "date" in mind, I received a mail saying the contest is closed, Please consider my entry for the contest.

 22. இந்த பாடலின் இசை நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் மதன் கார்க்கி அவர்களின் வரியில் இப்பாடல் வரவிருப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நானும் இன்றுதான் பாடல் வரி எழுதி அனுப்பியுள்ளேன் . இப்பாடலுக்கு வரி எழுதிய அணைவருக்கும் வாழ்த்துகள்

 23. கேள் உயிரே! (0.0 – 0.25)

  (இசை)

  கேள் உயிரே!
  என் இதழில் மறையும் கவிதையின் வார்த்தையை…

  கேள் உயிரே!
  என் இதயத்தில் மரிக்கும் மௌனத்தின் ஒலியை…

  (இசை)

  தேடி வந்தேன்! தொலைவினிலே மறைந்தாயே…

  நானும் தவிர்த்தேன்! நீ பேசும் மொழிகளிலே…

  ஏங்கி நின்றேன்! உன் மடியில் இளைப்பாற…
  நீயும் சென்றால் என் செய்வேன் என்னுயிரே! 

  இது எதுவரையில் எதுவரையில்
  தெரியவில்லை இந்நிலை எதுவரையில்…

  எதுவரையில் போனாலும் 
  காத்திருப்பேன்! உனக்கென உயிரே!

  உன்னோடு நான் இருந்தும் 
  உரைக்க இயலா மாற்றமிது!
  ஆனாலும் உயிரே!
  நீ முன்னேறி மேலே வாராய்…

  (இசை)

  கேள் உயிரே!
  என் இதழில் மறையும் கவிதையின் வார்த்தையை…

  கேள் உயிரே!
  என் இதயத்தில் மரிக்கும் மௌனத்தின் ஒலியை…

   (ஆஆஆஆ)

  கேள் உயிரே!
  உன் பிரிவில் கடக்கும் நேரத்தின் நொடியை …

  கேள் உயிரே!
  உன் நினைவில் தவிக்கும் மனதின் துடிப்பை…

 24. I was so excited about this contest, I also shared two song lyrics via email. Looking for surprise invite. Interesting fact is that Mr. Dhananjayan Govind has been replying for comments.
  Thank you. All the very best and my heart full wishes to this movie grand success. Please find the link for my lyrics here https://youtu.be/MUy9sh6_itY

 25. Dear Team!

  Thanks for the wonderful opportunity!

  Soulfully written few lines for the music provided (https://www.youtube.com/watch?v=KAYdProfTrc)
  as per my understanding for the situation explained. Mailed you the same.
  Hope it gels with tune!
  Hope you like and consider it!

 26. வணக்கம்…போட்டியின் விவரம் தாமதமாக தெரிந்தது… மின்சஞ்சல் மூலமாக நான் அனுப்பிய என் பதிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்… உங்கள் கவனத்திற்கு கருத்துப் பலகையிலும்…நன்றி

  பியானோ இசை ஆரம்பம்…

  என் கனவே 
  உன் கனவுகள் துளிர்விட 
  கதவுகள் திறந்ததுவே!
  தளிரே!
  கரை நுரையில் புதைந்திட 
  கவலைகள் மறைந்ததுவே!

  மழையின் சிறு மழலை குரலாய் 
  நீ என் உயிரின் உள்ளே…

  "ஸ்ட்ரிங் இசையில் கோரஸ்"
  என் சிறகே!
  உன் சிறகுகள் விரிந்திட 
  சிலுவையும் மிதந்ததுவோ?
  பிறையே!
  திரை மறைவினில் மறைந்திட 
  இரவுகள் இருண்டிடுமோ  ?

  தூறும் மேகம் 
  துளியென 
  கரைவது மழையோ?
  பாலை நிலமும் 
  உன் பாதம் பட 
  தளிர்துடுமே!

  ஓடும் நதியில் 
  சாயங்கள் கலைத்திடுமோ?
  சேரும் நொடியில் 
  கலக்கங்கள் பிறந்திடுமோ?

  என்னருகே நீ இருந்தால் துன்பமும் இன்பச்சுமையாகும் 
  காயங்கள் தொடர்ந்த பின்பும் காலம் நம்மை சுமக்கும் சுமக்கும் 

  தாய் போல் நீ இருக்கும் வரை சொர்க்கமும் மண்ணில் வாழுமே 
  சேயை விட்டுச்செல்லும் தூரம் நோயாய் வந்து சேரும் சேரும் 

  சில துணிவுகள் வாழ்வில் உரமாகும் 
  அதில் விடியல்கள் ஏற்ற வரமாகும் 
  நீ புதிதாய் சிறகை விரித்தாய் பறந்தாய் 
  எங்கோ கலக்கம் எங்கே உறக்கம்?

  என் கனவே!
  உன் கனவுகள் துளிர்விட 
  கதவுகள் திறந்துவே!
  தளிரே!
  கரை நுரையில் புதைந்திட 
  கவலைகள் மறைந்ததுவே!

  என் சிறகே!..உன் சிறகுகள் விரிந்திட 

  சிலுவையும் மிதந்ததுவோ?
  பிறையே!
  திரை மறைவினில் மறைந்திட 
  இரவுகள் இருண்டிடுமோ?
  -தீபன்…

 27. இனிய வணக்கம் சார்,

  சூழலுக்கேற்ப வரிகள் எழுதி மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன் சார். இசையை கேட்காமல் அனுப்பி உள்ளேன். ஏறத்தாழ பொருந்தியே வருகிறது.. இசை அபாரம் படக்குழுவினர்களுக்கு நல்வாழ்த்துகள் 💐💐

 28. பிறந்தது அயல்நாட்டில் என்றிருந்ததால்
  அந்நியன் உணர மாட்டான் என்று விலகிப் போயிருப்பேன்..

  வளர்ந்தது வடநாட்டில் என்றிருந்ததால்
  மொழியறியாதவன் வலி அறிய மாட்டான் என்றேனும் ஆறுதல் அடைந்திருப்பேன்…

  செவிடென்றால் அவர் பார்க்க காட்டியிருப்பேன்..
  குருடென்றால் அவர் காதில் கூவியிருப்பேன்..

  என்னை ஒடிக்க நினைத்த பலரும்
  என்னைப் படிக்க நினைக்கவில்லை…

  அற்பம் என்று அறிவு சொல்லியும்
  அங்கிகாரம் தேடுது என் மிடில்கிலாஸ் மனசு..
  பிறந்து பல காலம் ஆகியும் இன்றும்
  தொட்டிலைத் தேடுது என் அநாதைக் கவிதைகள்…

  மகி

 29. Situation: Here comes a big opportunity for the aspiring lyricists to make a big embarkation into the film industry. Jyotika starrer Kaatrin Mozhi team offers a great opportunity for the talented lyricists to give their best spell. The interested ones have to write lyrics for a particular song involving a theme given by the makers. The situation goes this way where an affectionate home maker, who had dedicated her life to the wellbeing of her family sets out to find her dreams and accomplish it. The song should reflect the good wishes of her husband and at the same time, the desolated feel within himself.

 30. Really want to appreciate the initiator of this contest…I too had sent my lyric..I knw the mail has been delivered but even now I hav d feel that whether mail hs sent or not?? Crazy 😂😂

 31. ஐயா இந்த போட்டிக்கான முடிவுகள் எப்பொழுது எதன் வழியாக அறிவிக்கப்படும்

 32. எனது வரிகளையும் அனுப்பி இருக்கிறேன் அண்ணா. பிடித்திருக்கிறதா பாருங்கள்…👍💐🎼😍

 33. அன்புள்ள Bofta Media குழுவிறகு பா. இனியவனின் வணக்கம், "காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி" – க்கான எனது பாடலை மின்னஞ்சலில் பகிர்ந்துள்ளேன். மெட்டு நன்றாக உள்ளது, துவக்கம் மட்டும் சற்று சவாலாக !!! குழுவிறகு என் வாழ்த்துக்கள்.

 34. Dhananjayan Govind ….hello sir. When will the results be announced? என் முடிவிலி (infinity) கனவுகள் அந்த முடிவில் உள்ளது … காத்திருக்கிறேன் 😍
  – அரவிந்தன்

 35. திரு அருள் வைரா அவர்களே தங்களுடைய கவிதை தொகுப்புகள் அனைத்தையும் வாசித்தேன் என்று சொல்வதை விட சுவாசித்தேன் என்பதே சால சிறந்தது. உங்களுடைய ஒவ்வொரு வரிகளும் ஆழ்மனதின் ஒசையை கேட்க வல்லியது. தங்களது அயராத உழைப்பும் , விடாமுயற்சியும் தாங்கள் இத்துறையில் மென்மேலும் புகழ் பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 36. முயற்சியென்ற பயிற்சியில்.. !ஒரு கனவினை கவியாக்கி..! தங்களின் மின்னஞ்சலுக்கு! நேற்று நானேற்றியுள்ளேன்.! அந்த அம்பு.! "அன்பாக" தம்மனதை பாயட்டும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *